வந்தாயா? வா….!
வருடமொருமுறை வந்து
எங்களுக்கெல்லாம்
நீதான் தமிழனை நினைவூட்டுகிறாய்!
ஏர் பூட்டி சோறுபோட்ட
தமிழன் இன்று மென்பொருள்
செய்யப்போய் விட்டான்
அவனுக்கு அதிலேயும்
திறமை அதிகம்
பழைய சோற்றுக்குப்
பதமாய் மிளகாய் கடித்த
என் தமிழன்
இன்று பிஸ்ஸா வாங்கித்தின்றுவிட்டு
பைசா சம்பாரிக்கிறான்
பெற்ற தாயை மறந்தான்
உற்றாருறவினர் மறந்தான் – உடன்
கற்றார், தோழர் மறந்தான்
காசு வாங்கி கட்டிய மனைவி
ஆசையோடு பெற்ற குழந்தை
மீசையோடு நடந்த மிடுக்கு
எல்லாம் வீசியெறிந்தே பறந்தான்
பழையன கழிதல்,
புதியன புகுதல்
இப்போதைக்கு இதுதான் அவன் மந்திரம்
அதற்குத்தான் போகி என்பதை முற்றிலும் மறந்தான்
உழைத்த உழைப்பில்
பெற்ற உயர்வைப்
பெருமிதமாக எண்ணி
பொங்கலிட்ட பானை மறந்தான்
அறிவு சிறக்க
ஆயிரம் கருத்தை
அழகாய்ச் சொன்ன
வள்ளுவன் திருநாள்
அன்றே மறந்தான்
அனுபவம் கூறி
ஆயுள் [...]
ஜனவரி 8, 2008
பகுப்புகள்: சமூகப்பார்வை . குறிச்சொற்கள்: பொங்கல், Pongal, Tamil Festival . பதிவர் : கணேஷ் . மறுமொழிகள்: r 4 மறுமொழிகள்
நண்பர் ஒருவரின் திருமணப் பரிசாக வாழ்த்துமடல் ஒன்று படைக்கப்பட்டது! அவரின் திருமண வாழ்த்துமடல் இது! நீங்களும் படியுங்கள்
வந்திருந்த நண்பர்கள் வாழ்த்துவது என்றுமே
எங்கிருந்த போதிலும் உன் எண்ணத்தில் தோன்றிடும்
வண்ணத்தில் கவிதையாய் வடிப்பதுதான் சரியென
எல்லோரும் சொல்லிடப் பிறந்த திந்தக் கவிமலர்
மலர்களில் மாலை கட்டும் வித்தையை – உன்
கண்களுக்குச் சொல்லி வைத்த சிந்து – எங்கள்
ராஜகுமாரனின் எண்ணங்களை மலர்களாக்கி
மாலைசூடி அணிந்துகொண்ட தென்று
வாழையடி வாழையாய் பூமலரும் சோலையாய்
நல்லதொரு வேளையில் புதுமனங்கள் சேர்ந்திட
தேவர்களும் வாழ்த்துவர் வானவரும் வாழ்த்துவர்
மண்ணிலுலகில் வாழ்ந்திடும் மாந்தர்களும் வாழ்த்துவர்
சாத்திரங்கள் பழையன சரித்திரங்கள் [...]
ஜனவரி 2, 2008
பகுப்புகள்: வரையறுக்கப் படாதவை . குறிச்சொற்கள்: திருமண வாழ்த்து, கவிதை வாழ்த்து, வாழ்த்துமடல் . பதிவர் : கணேஷ் . மறுமொழிகள்: r 1 மறுமொழி