சுயநலக்காரனென்று ஏசாதே!

Selfish
உனக்கு யாரும் உதவவில்லை என்று
மனக்குமுறல் கொள்பவனே

உலகத்தின் நடப்புகளைப் பற்றித்தெரிந்துகொள்
அடுத்தவனுக்கு உதவ எண்ணும்
உதவி பண்ணும் 99 விழுக்காட்டினர்
யாருக்கு உதவிசெய்கிறார்களோ
அவர்களாலேயே
அவமானப்படுத்தப் படுகிறார்கள்

உன் உள்மனத்தைக் கேட்டுப்பார்
உனக்கு உதவி செய்தவர்களை
எப்படியெல்லாம்
அவமானப்படுத்தினாய் என்று
அது சொல்லும்!

நமக்கு சுயநலம் பெருகுவதன்
மூலகாரணமே இதுதான்!
எனவே இனிமேலாவது
சுயநலக்காரனென்று ஏசாதே!
அப்படி அவரை ஆக்கியது
நம் செயலென்று யோசி!

1 கட்டளை(கள்).

  1. மறுமொழி ஆல் mayooresan on மார்ச் 6, 2008 3:14 பிற்பகல்

    சிந்திக்க வைத்து விட்டீர்கள் போங்க!!!

மறுமொழிகள் RSS பின்னறியும் தடத்தை கண்டறிய உதவுவது URI ஆகும்.

மறுமொழியவும்