யார் முட்டாள்?

பெங்களூரு

“ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெங்களூரில் நேற்று 31/03/2008)கன்னட அமைப்பினர் ரகளையில் ஈடுபட்டனர். தமிழ் சினிமா தியேட்டர்கள் தாக்கப்பட்டன. தமிழக பஸ்கள் சிறை பிடிக்கப்பட்டன. தமிழகத்துக்கு தண்ணீர் தரமாட்டோம் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.”

-தினத்தந்தி 1/4/2008.

நீரும் நெருப்பும் வானும் காற்றும் பொதுவிலிருக்குது…
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்குது!
பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே – இங்கு
பிரிவு நீங்கி ஒன்றாய்ச் சேர்ந்தால் அமைதி நிலவுமே…
நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற – இந்த
நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற…

சீர்காழி கோவிந்தராஜனின் சிம்மக்குரலில்
சிறப்பாய் ஒலிக்கிறது என்றும் மனதில்
ஒற்றுமைக்குக் கவிஞர் எழுதிய பாட்டு
இதற்கு வைத்தனரே இவர்கள் வேட்டு!

வீதியில் போகிற வழிப்போக்கன்
வீட்டுக்கு வந்து நீர் கேட்டால்
இவர்கள் தரமாட்டேன் என்று
சொல்கிற தரித்திரம் பாரீர் – பல
உண்மைகள் நிறைந்த சரித்திரம் கேளீர்

ஊரெங்கும் தண்ணீர் நிறைந்து
பூங்காக்கள் புத்தாடை அணியும் ஊர் எது?
தெப்பக்குளங்கள் எல்லம் சுத்தமாய்
ஓடும் நீர்வந்து நிரப்பி சிறக்கும் ஊர் எது?
அணைகள் பல கட்டி ஓடும் நீரை
மனைகள் தோறும் செலுத்தும் ஊர் எது?
செல்வம் கொழிக்கும் நகரங்கள் பல
சிறந்து நிற்கும் தேசமெது…?

தருமபுரியா…?
ஓசூரா….?
சேலமா…?
இல்லை வரண்டுபோன வேலூரா…?

இந்தியாவைக் கூறு போட இவர்கள்
வரிந்து கட்டி வந்துவிட்டனரா…?

இல்லை இல்லை இது ஒரு மாயை…
இவர்கள் சிறந்தாய் வந்த அரசியல் அம்புகள்!
மக்களை முட்டாளாக்கும் முயற்சியில்
முட்டாள் தினத்துக்கு முன் தினமே முடிவெடுத்தவர்கள்

ஒரு இந்தியனுக்கு குடிக்க நீர்தர மறுக்கும் இவர்கள்
பல கோடி அமெரிக்க ஐரோப்பியர்களை
பெங்களூரில் மென்பொருள் சாலைகளில் தங்கவைத்து
அவ்வூர்களுக்காக 24 மணிநேரமும்
தொலைபேசியில் தன் மக்களைப் பேசவைத்து
அவர்களின் தொண்டைத்தண்ணீர் வற்றிப்போகாமல் இருக்க
தமிழ்நாட்டுக்கு தராமல் பிடுங்கிவைத்த நீரை
அள்ளி அள்ளித் தர அழகாய் போட்டுவைத்த திட்டம் அது!

எவனோ சொன்னதாக ஞாபகம்,
“எனக்கு இரண்டு கண்கள் பழுதானால் பரவாயில்லை
அடுத்தவனுக்கு ஒரு கண்ணாவது பாழாய்ப் போகட்டும்”
இவர்களுக்கும் இது பொருந்துது பார் ஞானத்தங்கமே…!

5 மறுமொழிகள்

  1. சரியான சாட்டை அடி சார்!

  2. இதுதான் இந்தியாவின் ஒருமைப்பாட்டை சீர்குலைப்பது! இந்த பிரித்தாளும் சூழ்ச்சிதான் இந்தியாவை ஆண்ட ஐரோப்பியர் சென்ற நூற்றாண்டுகளில் பின்பற்றியது. அதைத் தான் இந்த இப்போது இந்தியர்களும் கையிலெடுத்துக் கொண்டுள்ளார்கள். அதை விடுத்து ஒற்றுமைக்குப் பாடுபட வேண்டும்

  3. Nice Gilli

  4. இப்போது கன்னடர்கள் ஓசூர், தருமபுரி, ஈரோடு, ஊட்டி எல்லாவற்றையும் கர்நாடகாவோடு இணைக்கட்டும் என்று வேண்டுகோள் விடுத்தாலும் விடுப்பார்கள். நாம் ஒன்று கேட்போம், பெங்களூரையும், மைசூரையும் கேட்டால் கொடுப்பார்களா… இப்போது கோவையில் மட்டும் 15 இலட்சம் கன்னடர்கள் வாழ்கிறார்கள் அவர்களைவெளியேற்ற முடியுமா…?

    இந்தியா ஏன் இப்படிப் போகிறது?

  5. பழனிச்சாமி கருத்து அருமையான ஒன்று! நானும் இதனை ஆமோதிக்கிறேன்


மறுமொழிகள் RSS பின்னறியும் தடத்தை கண்டறிய உதவுவது URI ஆகும்.

மறுமொழியவும்