இக்கவிதை அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் நகரத்திலிருந்து அன்பர் திரு. மஹாராஜ் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதி அனுப்பியிருந்தார். அதைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்.
ஆங்கிலக்கவிதை:
In the farthest distance i see a light, a Divine light
Oh Divinity! pardon my ignorance ,
Guide me to the path of wisdom
Illuminate the light within me to lead a simple and humble life
Bless me ..
To seek the eternity and strive for higher purpose
To help the needy and to share my wisdom
To attain the supreme state of eternity
தூரத்திலோர் ஒளியைக்காண்கிறேன்! தெய்வீக ஒளியாக
பரம்பொருளின் பிம்பம் என் விழியில் விழக்காண்கிறேன்
எங்கிருந்தேன் எனும் நிலை எனக்கில்லை மன்னிப்பாய்
இங்கிருந்தே உனை வணங்கி உயிருருகக் கேட்டிடுவேன்
அறியாமை நீக்கியென் அறிவை மீட்டுத்தா - இருள்
உறையாமை ஆக்கி என் மனவிளக்குப் போட்டுத்தா!
நிலையாமை போக்கி நிலைபெற்று நான் வாழ்ந்திடவே
இல்லாமை எனும் நிலையகற்றி எப்போதும் - குறை
சொல்லாமை ஆக்கிடவா என்னருமைப் பரம்பொருளே
என்னறிவை உலகுக்குப் படைத்திடவே
எனக்கறிவைக் கொடுத்திடுவாய் பரம்பொருளே!
என் வாழ்க்கை எப்போதும் சிறந்திடவே
எப்போதும் அழியாத புகழ் வேண்டும் பரம்பொருளே!
-நன்றி திரு. மஹாராஜ்
1 கட்டளை(கள்).
மறுமொழிகள் RSS பின்னறியும் தடத்தை கண்டறிய உதவுவது URI ஆகும்.
மறுமொழியவும்


[...] நான் தமிழில் மொழிபெயர்த்திருந்தேன் (இங்கே காண்க). பின்னர் அதிக ஆர்வம் அவரிடம் [...]