உமிழ்ந்து கெடுத்தோம் என்னை முந்திக்கொண்டுபோனார் ஒரு மனிதர் விண்ணை எட்டியது அந்த இருசக்கரவாகனப் புகை முந்தியதும் எனக்கு நேர் முன்னால் காறிஉமிழ்ந்தார் வந்ததே கோபம் எனக்கு, முயன்று முந்தினேன் வண்டியை நிறுத்திக் கேட்டேன் “அய்யா நலமா?” சண்டிக்குதிரை வண்டி மெதுவாக நின்றது. வியப்பில் ஆழ்ந்தார் மனிதர் – குரலில் தயக்கம் தோயக் கேள்வி எழுப்பினார் “கண்டதில்லையே உம்மை… எப்படி அறிந்தீர் என்னை?” “இப்போதுதான் அறிந்தேன்… நீங்கள் துப்பிய எச்சில் என் சட்டைப்பைக்குள் விழுகையில்” சொல்லிமுடித்தேன்; அவர் முகமும் [...]
