உமிழ்ந்து கெடுத்தோம்
என்னை முந்திக்கொண்டுபோனார் ஒரு மனிதர்
விண்ணை எட்டியது அந்த இருசக்கரவாகனப் புகை
முந்தியதும் எனக்கு நேர் முன்னால் காறிஉமிழ்ந்தார்
வந்ததே கோபம் எனக்கு, முயன்று முந்தினேன்
வண்டியை நிறுத்திக் கேட்டேன் “அய்யா நலமா?”
சண்டிக்குதிரை வண்டி மெதுவாக நின்றது.
வியப்பில் ஆழ்ந்தார் மனிதர் – குரலில்
தயக்கம் தோயக் கேள்வி எழுப்பினார்
“கண்டதில்லையே உம்மை…
எப்படி அறிந்தீர் என்னை?”
“இப்போதுதான் அறிந்தேன்…
நீங்கள் துப்பிய எச்சில் என் சட்டைப்பைக்குள் விழுகையில்”
சொல்லிமுடித்தேன்; அவர் முகமும் சுருங்கிற்று!
தொடர்ந்து சொன்னேன்,
“உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய உமக்கு விருப்பம்
எனது வாழ்வும் எனக்கு விருப்பம்… ஆனால்,
மனிதரை மனிதர் மதிப்பதுதான் [...]
ஜூலை 14, 2008
பகுப்புகள்: சமூகப்பார்வை, புலம்பல்கள் . . பதிவர் : கணேஷ் . மறுமொழிகள்: r 4 மறுமொழிகள்
அன்பார்ந்த நட்பே!
இப்படி நம்மால் மனதார அழைக்க முடிகிறதென்று நினைக்கிறீரா?
அயல் நாடு போனவரும் சரி,
அடுத்த ஊர் போனவரும் சரி,
ஒரு நாள் உயிரான நட்பை
உணர்வோடு கலந்தவராய்த் தோன்றியவரும் சரி
உண்மையாய் நட்பை நினைப்பார் யாருமில்லை!
இரவில் துணையாய் நிலவுவருவதைப் போல
ஒட்டுமொத்த அன்பால் நம்முடன் கூட்டாய் இருந்தவர் கூட
சிட்டுக்குருவியாய் பறந்து போய் செல்வத்தை சேகரிப்பார்!
கூட்டுப் படிப்பை கல்லூரி நாட்களை
நினைப்பதற்கு நேரமில்லை!
கற்றதும் கல்வி மறப்பார்! அவர்மேலும் தவறு இல்லை
கடலுக்கு அப்பால் சென்று பெற்றோரை உற்றாரை மறப்பார்
அதுவும் அவர் தவறில்லை!
எல்லாம் காலத்தின் கட்டாயம்…
மலைக்கோவில் படிக்கட்டுகளில் நாம் ஏறிச்செல்கையில்
இறைவனை [...]
ஜூன் 27, 2008
பகுப்புகள்: புலம்பல்கள் . . பதிவர் : கணேஷ் . மறுமொழிகள்: r கருத்துத் தெரிவிக்கவும்
“ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெங்களூரில் நேற்று 31/03/2008)கன்னட அமைப்பினர் ரகளையில் ஈடுபட்டனர். தமிழ் சினிமா தியேட்டர்கள் தாக்கப்பட்டன. தமிழக பஸ்கள் சிறை பிடிக்கப்பட்டன. தமிழகத்துக்கு தண்ணீர் தரமாட்டோம் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.”
-தினத்தந்தி 1/4/2008.
நீரும் நெருப்பும் வானும் காற்றும் பொதுவிலிருக்குது…
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்குது!
பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே – இங்கு
பிரிவு நீங்கி ஒன்றாய்ச் சேர்ந்தால் அமைதி நிலவுமே…
நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற – இந்த
நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற…
சீர்காழி [...]
April 1, 2008
பகுப்புகள்: புலம்பல்கள் . குறிச்சொற்கள்: Bangalore, Tamil, Water Problem . பதிவர் : கணேஷ் . மறுமொழிகள்: r 5 மறுமொழிகள்
உனக்கு யாரும் உதவவில்லை என்று
மனக்குமுறல் கொள்பவனே
உலகத்தின் நடப்புகளைப் பற்றித்தெரிந்துகொள்
அடுத்தவனுக்கு உதவ எண்ணும்
உதவி பண்ணும் 99 விழுக்காட்டினர்
யாருக்கு உதவிசெய்கிறார்களோ
அவர்களாலேயே
அவமானப்படுத்தப் படுகிறார்கள்
உன் உள்மனத்தைக் கேட்டுப்பார்
உனக்கு உதவி செய்தவர்களை
எப்படியெல்லாம்
அவமானப்படுத்தினாய் என்று
அது சொல்லும்!
நமக்கு சுயநலம் பெருகுவதன்
மூலகாரணமே இதுதான்!
எனவே இனிமேலாவது
சுயநலக்காரனென்று ஏசாதே!
அப்படி அவரை ஆக்கியது
நம் செயலென்று யோசி!
பெப்ரவரி 20, 2008
பகுப்புகள்: சமூகப்பார்வை, புலம்பல்கள் . குறிச்சொற்கள்: சுயநலம், பிறருக்கு உதவும் நட, Helping tendency, selfish . பதிவர் : கணேஷ் . மறுமொழிகள்: r 1 மறுமொழி
காலமெல்லாம் அழியாத சின்னங்களாக
இன்றும் சாலைகளில் வலம் வரும்
பழைய வாகனங்கள் எப்போது விடுவிக்கப்படும்?
புதிய தொழில்நுட்பங்கள் பல வந்து
புகையின்றி பயணிக்கக் கற்றுத்தந்தும்
ஏனிந்த பராமரிக்கப் படாத பழையன…
இரண்டுநாள் மீந்தது என்றுமே
உணவாயினும் நஞ்சுதான்
கரும்புகைப் போர்வையில்
உலகத்தைப் போர்த்திவிட
புதிய பிரமாணமா…
இரண்டுமாதம் ஒருமுறை
வாகனங்கள் பராமரிப்பு சாலையில்
புத்துணர்வு ஊட்டப்பட வேண்டும் நண்பா..
உன் பின்னால் வருபவரின்
உணர்வுகளைப் புரிந்துகொள்
உன்வாகனப் புகையைச் சுவாசித்து
உயிர் விட்டுக்கொண்டிருக்கிறான் தெரியுமா….
புரிகிறது!
“சட்டமிருக்கிறதா?” என்றுதானே கேட்கிறாய்?
பாழாய்ப்போன அரசாங்கமும்
கேடுகெட்ட சட்டங்களும்
உன் போன்றவருக்கு அளிக்கும் பாதுகாப்பை
உணர்வுள்ள தனிமனிதனுக்கு அளிப்பதில்லை
அதனால் பயனுமில்லை!
இதனை அறிந்தும் நாமும் சளைக்காமல்
ஓட்டுபோட்டு ஓட்டுப்போட்டு
நம் உரிமைத்துணியில்
ஓட்டை போட்டுக்கொண்டிருக்கிறோம்!
பெப்ரவரி 12, 2008
பகுப்புகள்: சமூகப்பார்வை, புலம்பல்கள் . குறிச்சொற்கள்: gas, old vehicle, Pollution, replacement, trouble, vehicle . பதிவர் : கணேஷ் . மறுமொழிகள்: r கருத்துத் தெரிவிக்கவும்
சட்டம் கடுமையாக்கினால்
மனித உரிமைமீறல்
என்பவர்கள் கவனத்திற்கு…
வரைமுறை இருந்தே நாம்
பலமுறை மீறுகிறோம்
கொலை செய்தவனுக்குத்
தூக்குதண்டனை மனித உரிமை மீறல் என்றால்,
அவன் கொலை செய்தது
மனித உரிமை மீறலில்லையா…?
பெண்ணைக் களங்கப்படுத்தியவனுக்கு
தண்டனை இல்லையென்றால்
அது அவனுக்கு அனுமதிச்சீட்டல்லவா?
சாலைவிதிகள் மதிக்காத உனக்கு
அபராதம் தவறென்றால்
இன்னொருவன் மீறிப்போவது கண்டு
நீ பொருமுவதும் தவறுதான்
கடுமையான தண்டனைகள்
சிக்கலில்லாத சட்டங்கள்
நாட்டின் பாதுகாப்புக்கு அடித்தளங்கள்
முதலில் நம்நாட்டை
நம்மிடமிருந்து பாதுகாப்போம்
பிறகு எதிரி பற்றி யோசிப்போம்
ஊழல் செய்தவன் சொத்தைப் பிடுங்கி
நாட்டின் நலநிதியில் சேர்க்கட்டும் அரசாங்கம்
செய்வானா அவன்
வக்கீல் மட்டும் வாதாட வேண்டுமா
அனுமதி கொடுத்துப்பார் யாரும் வழக்குரைக்க
பலவழக்குகள் தீரும்
வக்கீல் கூலி தர முடியாதவந்தான்
வழக்குகளைத் திரும்பப் பெறுகிறான்
பெப்ரவரி 2, 2008
பகுப்புகள்: புலம்பல்கள் . குறிச்சொற்கள்: human rights, law enforcement, rules . பதிவர் : கணேஷ் . மறுமொழிகள்: r கருத்துத் தெரிவிக்கவும்