நகலெடுத்துப் படிப்பவரா நீங்கள்?

இந்தக் கவிதை, புத்தகம் வாங்காமல் நகல்களிலேயே (Xerox copy) காலந்தள்ளும் மனிதர்களை வசைபாடுகிறது….

தவிர்க்கமுடியாத காலகட்டங்களில் நகல் எடுப்பது தவறாகத் தோன்றுவதில்லை! ஆனால் வெட்டியாய் செலவு செய்யும் பலரும் நகலெடுத்தே கல்வி கற்கிறார்கள்.

  • அதனால் புத்தகங்கள் விற்பதில்லை!
  • அதனால் அடுத்த திருத்தப்பட்ட மற்றும் புதிய கருத்துக்களை உள்ளடக்கி அதன் அடுத்த பதிப்பு வருவதில்லை.
  • அதனால் அதன் ஆசிரியருக்கு மட்டுமல்ல படிக்கும் வர்க்கத்திற்கும் இது நட்டமே….!

சிந்திப்பார்களா…?
இந்தக் கவிதையை நான் எழுதிய ஆண்டு 2001.

வாசிக்கும் புத்தகத்தை யாசித்தே பெற்றோரே!
நேசிக்கும் கல்விதனை யோசித்தே விற்றோரே!

சீரழிய உமக்கொரு நாள் சீக்கிரமே வந்திடுமோ?
பாரறிய பெற்றிடுங்கால் பட்டமென்று ஆகிடுமோ?

பிரதியெடுத்து விற்றவர், உரிமைகளைப் பெற்றவர்
அவருரிமை உமக்கில்லை படிப்பதற்கே ஆயினும்.

நகலெடுக்கும் இயந்திரமோ உரிமையுடன் செயலாற்ற;
ஆக்கியதேன் அதையும் நீர் கள்ளச்செடி பயிராக்க!

எத்தனையோ வெட்டியாக செல்வம்பல இறைத்தாய்;
புத்தகத்தை வாங்கிடத்தான் சொன்னவனை முறைத்தாய்!

எழுதியவன் செலவிட்ட நேரங்கள் அதிலே…
அப்போது அவன்பட்ட சிரமங்கள் அதிலே…

அவன்வயிற்று எரிச்சலைத்தான் பலமடங்கு ஆக்க,
நகலகங்கள் பல கோடி யாரிதனைக் கேட்க?

Advertisements

பின்னூட்டமொன்றை இடுக

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

Comments RSS TrackBack Identifier URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s