பிரபஞ்சத்துக்குப் பங்கம் ஒன்று வந்திருக்கிறது!

பலநாட்கள் வெட்டியாய் செலவுசெய்து விளம்பரம் செய்த அரசாங்கமே அதனை மறந்துவிட்டது… நமக்கு ஒருமுறை மறந்தால் பல எண்ணங்கள் நினைவுக்கே வருவதில்லை! தொடர்ந்து நினைவில் வைத்திருக்க என்னதான் செய்யவேண்டும்?அரசாங்கம் சிந்திக்கப் போவதில்லை! நாமாவது சிறிது சிந்திப்போம்!

பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களால் இந்தப் பிரபஞ்சத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை விளக்குகிறது இக்கவிதை!… எழுதப்பட்ட ஆண்டு 2006

Plastic

பிரபஞ்சத்துக்குப் பங்கம் ஒன்று வந்திருக்கிறது,
பாலிதீன் என்பது அதன் பெயர்!

அது முழுமூச்சாய் இறங்கியிருப்பது பிரபஞ்சத்தின் மூச்சடைக்கத்தான்…
இப்படியே போனால் ஒவ்வொரு அணுவிலும் அது அடைக்கலமாகும்.

அடைமழையென்பதே அறியாமல் போகும்.
வேரை வெளியே அனுப்பி பயிர்கள் மண்ணுக்குள் முளைக்கும்!

நிசப்தங்கள் அவைகளின் சலசலப்பால் சாகும்…
மக்கும் பொருட்கள் மக்காமல் போகும்.

வாழ்க்கைச் சுழற்சி வாழ்வை இழக்கும்!
மக்கும் பொருட்களுக்கே மறுபிறவியாம்;
மக்காமல் போனால் அவை மம்மிகளாம்!

Advertisements

3 பின்னூட்டங்கள்

  1. நேற்று நடந்த காயங்கள் எண்ணி நியாயங்கள் விழலாமா ? – பொன் இரத்தினவேல்

  2. வருக… இரத்தினவேல் அவர்களே….
    நேற்று நடந்த காயங்கள் இல்லை இவை…
    நாளை நமக்கு என்றும் காயங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்ற
    எச்சரிக்கை உணர்வுதான்….

    நன்றி…

  3. அப்பட்டமான உண்மை! புற்களை உண்டுவாழும் விலங்குகளின் நிலையை நினைத்துப்பாருங்கள்!


Comments RSS TrackBack Identifier URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s