மழை விஞ்ஞானம் – தமிழன் கண்டறிந்தது.

மேகம் நீர்நிலைகளில் நீரைப் பெற்று வானத்திலிருந்து மழையாகப் பெய்கிறது என்ற விஞ்ஞானத்தைக் கண்டறிந்தவர் யார்? இந்தக் கேள்வியை ஒரு பள்ளிச் சிறுவனைக் கேட்டால் “அது ஆங்கிலேயர் கற்றுத்தந்த விஞ்ஞானம்” என்பான். ஆனால் இந்த விஞ்ஞானத்தைக் முதலில் கண்டுணர்ந்தவர் தமிழர்கள். இதற்கு ஆதாரம்

சங்க இலக்கியங்களில் இருக்கிறது. ஆச்சரியப்படுபவர்கள் கவனிக்க, அதுவும் ஒரு பெண் அதற்கு ஆதாரமாய் அமைந்திருக்கிறார். அவர்தான் கோதை நாச்சியார் என்ற பெயர்கொண்ட ஆண்டாள்

ஆழிமழைக் கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழியுள்புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வ னுருவம்போல் மெய்கறுத்துப்
பாழியந் தோளுடையப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முகைத்த சரமழைபோல
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

அழகான இந்தத் தமிழ்ப்பாடலில் சொல்லப் படுகின்ற கருத்து என்ன? வானமாகிய தொட்டி கடலில் (ஆழி) நீரை முகர்ந்து வானத்தில் ஏறி, கண்ணபெருமான் உருவம்போல மெய்கறுத்து, வலம்புரிச்சங்கை ஊத எழும் ஒலிபோல அதிர்ந்து, சாரங்கன் கையிலிருந்து புறப்பட்ட சரமழை (அம்பு மழை) போல உலகம் செழிக்க உலகத்திலுள்ள அனைத்து உயிர்களும் வாழ்வதற்காக பெய்ய வேண்டும் என்ற கருத்தைச் சுமக்கிறது இந்த பாடல். இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது. பாடலில் சொல்லப்பட்ட கருத்துப்படி மேகம் என்கிற தொட்டி கடல் போன்ற நீர்நிலைகளிலிருந்து நீரை முகந்து சென்று மழையாகக் கொட்டுகிறது என்று சொல்லும் விதத்தில் கருத்து சிறிது மாற்றப் பட்டிருக்கிறது அவ்வளவுதான். வானத்திலிருந்து நீர் எப்படி வருகிறது என்பதை நீர்மங்களின் ஆவியாதல் என்ற தன்மையைக் கண்டறியும் முன்பே தமிழர்கள் உணர்ந்து வைத்திருக்கிறார்கள்.
தமிழ் மொழிக்கு இவ்வளவு சிறப்பு என்பதை தமிழர்களைத் தவிர அனைவரும் உணர்ந்துள்ளனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை. நாம் பள்ளிப்பருவத்தில் படித்த இன்னும் படித்துக் கொண்டிருக்கின்ற பாடாவதிப் பாடங்கள் வள்ளுவன் சொன்ன

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.

என்னும் குறளுக்கு சிறப்பான உதாரணங்கள். அதனால்தான் தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் கல்லூரிகளில் ஆங்கிலம் மட்டுமே பேசவேண்டும் என்பது போன்ற மூளைகெட்ட முன்வடிவங்கள் அமுலில் உள்ளன. தமிழில் வேறெந்த மொழிகளின் இலக்கியங்களிலும் சொல்லப்படாத அறிவியல் கருத்துக்கள் உள்ளன. இது முற்றிலும் மறைக்கப்பட்டு தமிழன் முட்டாள் என்ற ஒரு உண்மையற்ற நிலையை செயற்கையாக ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

பள்ளிப்பாடங்களிலேயே பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி அதற்கான விளக்கங்கள் மற்றும் உதாரணங்களுடன் அரசாங்கம் சாதனைசெய்தாலன்றி நாம் நம்மை உணரவாய்ப்பில்லை

Advertisements

பின்னூட்டமொன்றை இடுக

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

Comments RSS TrackBack Identifier URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s