தூண்களெனக் கொண்டிடத் துணிந்திடுவோம் அனைவரும்!

ஒரு மேடைப்பேச்சினூடே படிக்க நான் எழுதிய ஆசிரியரின் பெருமை உணர்த்தும் கவிதை. எழுதப்பட்ட ஆண்டு 2001.

Teacher

மன்னராட்சி மாண்ட பின்னெ மக்களாட்சி வந்தது
தன்னைத் தானே ஆள்வதைத் தானே ஜனநாயகம் என்பது
சட்டங்கள் வந்தன சாசனங்கள் வந்தன
மதிப்பதற்கு யாருமின்றி மனமுருகி நொந்தன
அறியாமை என்பதா அறிவீனம் என்பதா
உணரவைக்கும் கடமை ஆசிரியர் உடமை

ஆசிரியர் என்பவர் ஆசு இரியர் ஆதலால்
தூண்களெனக் கொண்டிடத் துணிந்திடுவோம் அனைவரும்!

அறியாமை வெயில் சுட்டெரிக்கும் வேளையில்
ஜனநாயக மண்டபத்தின் கல்வியெனும் கூரையைத்
தாங்கியவர் நிற்பதால்
தூண்களெனக் கொண்டிடத் துணிந்திடுவோம் அனைவரும்!

அன்போடு நம்மை உலகறிய வைப்பவர்
பண்போடு நம் மனதை பாங்குடனே தைப்பவர்
கண்ணோடு கண்டதை கைகளிலே பெற்றிட
சூத்திரத்தைத் தருவதால்
தூண்களெனக் கொண்டிடத் துணிந்திடுவோம் அனைவரும்!

வாழும் கலை என்னவென்று தெரியாத
பாழும் நிலை அகற்றியே
உணரவைக்கும் பொறுப்பிலே உத்தமராய் உள்ளாதால்
தூண்களெனக் கொண்டிடத் துணிந்திடுவோம் அனைவரும்!

காசுக்குக் கல்வியை கூவி விற்கும் காலத்தில்
யாசிக்கும் மனிதருக்கும் கற்பிக்கும் மாந்தரவர்
யோசிக்கும் மனமின்றி
தூண்களெனக் கொண்டிட துணிந்திடுவோம் அனைவரும்!

இவரின்றி அனைவருமே அரை மனிதர்
இவரின்றி காகிதங்கள் குப்பை
இவரின்றி இளைஞருக்கு மயக்கம்
இவரின்றி அறியாமையின் ஆட்சி
பொறியியலும் மருத்துவமும் கலையும்
அறிவியலும் இருண்டுபோன காட்சி
இவர் வந்து ஒளியேற்ற ஆவதுதான் உதயம்

வேலை நிறுத்தம் எனும் சுயகொள்ளி எடுக்காத வரை – இவரைத்
தூண்களெனக் கொண்டிட துணிந்திடுவோம் அனைவரும்!

Advertisements

3 பின்னூட்டங்கள்

 1. ஆசிரியர் எல்லாம்
  ஆ…சிறியர் ஆகும் இந்நாளில்
  ஆசிரியரில் நீவீர் நல்லாசிரியர்…

  வாழ்த்துக்கள் நண்பரே…

 2. நன்றிகள் கலை அரசன் அவர்களே…

 3. மிகவும் அருமையான கவிதை…………

  முதலில் என் குருவுக்கு முதல் வணக்கம்……

  மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் என் நன்றி கடந்த வாழ்த்துக்கள் மற்றும் வணக்கம்……

  இப்படிக்கு
  சக்திவேல்


Comments RSS TrackBack Identifier URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s