பெண்ணே! அழுது தோற்காதே…!

crying-eyes
அழுது புலம்பித்தான்
ஒவ்வொரு காரியமும் சாதிக்கிறாய்
ஆயிரம் வருடங்கள் கடந்தாலும்
உன்னிலை மாற வாய்ப்பில்லை

உன்னைப் பாவப்பட்ட பிறப்பாய் காட்டிக்கொள்வதில்
உனக்கு அளவுகடந்த ஆர்வம்

ஆனால் உனக்குத் தெரியுமா
அது நிரந்தர வெற்றியல்ல என்பது?

பெண்கள் சாதிக்க ஆண்களா முட்டுக்கட்டை
இல்லவே இல்லை
கொஞ்சம் ஆழமாய் யோசித்துப்பார்
அனைத்து ஆண்களும் வெற்றி பெறுவதில்லை
எல்லாப் பெண்களும் தோற்றுவிடுவதுமில்லை!
பிறகெதற்கு ஆண்களின்மேல் பழி

சமூகத்துக்கு நீ எப்படித் தோன்றுகிறாயோ
அப்படியே உன் வெற்றி தோல்விகள்!

உன் அழுகையால்
சமுதாயத்தை தோற்கடித்து விட்டதாக
நீ எண்ணிக்கொண்டால்,
அதுவே உன் முழு தோல்வி

உன் திறமைக்குட்பட்டதை
அடுத்தவரிடம் பிச்சை எடுப்பதே
உன் அழுகையின் அர்த்தம்!

உன்னால் சாதிக்க முடிவதை
அடுத்தவர் சாதனையில் சாதிப்பதே
உன் அழுகையின் நோக்கம்!

உன்னை நம்பாதவன் கூட
உன் அழுகையை நம்புவான்

அவன் நம்பிக்கை உனது தோல்வி
பெண்ணே! அழுது தோற்காதே…!

ஒரு அப்பாவி நடிகன்

 நீ

 நான்

 நாம்

வரிசையாக உச்சரித்தபின்
அமாவாசையிலிருந்து
பௌர்ணமியை நோக்கிப்
பயணிப்பதாய் ஒரு உள்ளுணர்வு!

உன் சரிகைச் சேலை
என் கவிதைச் சோலை

ஊருக்குப் போகிறேன் என்று
ஊருக்கே கேட்பதாகச்
சத்தமிட்டுச் சொல்லத்தெரிந்த உனக்கு
நீ திரும்பிவந்தது கூடத்தெரியாமல்
பதுங்கியே இரண்டு நாள்
வீட்டுக்குள் இருந்திருக்கிறாய்

எப்படியெல்லாம் நான்
ஏங்குகிறேன் என்று
ஏளனமாய்த் தெரிந்துகொள்ள
மௌனமாய் இப்படியொரு யுத்தியா

நடத்து… உன் நாடகத்துக்கு
நீ இயக்குநர்
நம் நாடகத்துக்கு ஆண்டவன் இயக்குநர்

நான்…..

ஒரு அப்பாவி நடிகன்

உன்னை மறக்கவில்லை பாரதி!

நீ பிறந்த மண்ணில்
உன் உதிரத்தின் உரத்தில்
உதித்துவிட்ட எங்களுக்கு
உனது பிறந்த நாளில்
Continue reading

ரோஜாவைக் காதலிக்கலாம் முள்ளையுமா காதலிக்கவேண்டும்?

மேலைநாட்டத் தொழில் நுட்பத்தில் நாகரீகத்தைக் கலப்படம் செய்துவிற்கும் தந்திரத்தை தனியே எதிர்க்கிறேன் குரல் கொடுக்க வாரீரோ…

இது பழமைவாதியின் கூச்சலல்ல; ஒரு கலாச்சாரப் பற்றுடையவனின் பாய்ச்சல்! Continue reading

என்ன வசியம் செய்வாய்; மலர்ந்திடு உன் செவ்வாய்!

காதல் கவிதைகள் அதிகம் எனக்கு கைகளில் கனிந்ததில்லை.

பல நண்பர்கள் சொன்னார்கள், அதனால்தான் உன் கவிதையை யாரும் இரசிப்பதில்லை என்று…

நான் ஒப்புக்கொள்ளவில்லை. வாதங்களின் முடிவுகள் என் நண்பர்களுக்கோ எனக்கோ கிடைக்கவில்லை.

ஆனால் Continue reading