உன்னை மறக்கவில்லை பாரதி!

நீ பிறந்த மண்ணில்
உன் உதிரத்தின் உரத்தில்
உதித்துவிட்ட எங்களுக்கு
உனது பிறந்த நாளில்

உன் நினைவுகள் மட்டுமே
உள்ளத்தில் உறைந்து கிடக்கின்றன?

வேறென்ன இருக்க முடியும்?

சாதிகள் இல்லையடி பாப்பா என்றாய்!
உன் பாப்பாக்கள் பாட்டிகளாயும்
இன்னும் சாதிகள் ஒழிந்தபாடில்லை

குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவமென்றாய்!
என் அரசியல்வாதிகள் அந்தப்
பாவப் பெருங்கடலில்தான்
படகோட்டிக் கொண்டிருக்கிறார்கள்

என்று தணியுமிந்த சுதந்திர தாகமென்றாய்!
தாகம்தீர்க்கத் தண்ணீருமில்லை
இங்கே உடுக்கப் பலருக்குத் துணியுமில்லை

நீ பிறந்த குலத்தைத் திருத்தப் பார்த்தாய்!
அது இன்று வரட்டுக் கௌரவத்தால்
செத்துக் கொண்டிருக்கிறது

சிங்களத் தீவினிற்கோர் பாலமைப்போம் என்றாய்!
நாங்கள் இருந்த பாலத்தையும்
இடிக்கத் திட்டம்போட்டுவிட்டோம்

இனியென் செய்வாய்…
இருந்தபோதும் உனை மதிக்காத நாங்கள் – நீ
இறந்துபோனதும்
உன் பெயர் சொல்லி பேர்வாங்கிக் கொண்டோம்

இனி உன் நினைவுகள் மட்டுமே
எங்களில் உறைந்து கிடக்கின்றன…
நீ சொல்லிப் போனது
சத்தியமாய் நினைவில் இருந்ததாக
நினைவே இல்லை!

Advertisements

5 பின்னூட்டங்கள்

  1. தமிழ் இலக்கியம் மிகச்சிறந்த இலக்கியவாதிகளைக் கொண்டிருந்தாலும், யாரும் நோபல் பரிசு தரவில்லையே ஏன்?

  2. ஐயா,
    நன்று, நாங்கள் (பெண்கள்) விடுதலையும் மதிப்பும் மரியதையும் பாரதியால் பெற்றோம், ஆனால் இன்று அவர் பிறந்த நாளைக்கூட மறந்துபோனோம், இந்த இனிய நாளை இந்தக் கவிதையால் நினைவுகூர்ந்தோம். வாழ்த்துக்கள். மேலும் இதுபோன்ற சிந்தனைகளை எதிர்பார்க்கிறோம்.

    அன்புடன்
    பூங்கொடி

  3. மிகவும் அருமை ஐயா … உங்கள் கவிதைகளுக்கு வந்தனம்! உங்கள் வருங்கால பதிப்புகளுக்கு என் வாழ்த்துக்கள்….

  4. உள்ளதை உள்ளபடி
    உண்மையாக எடுத்துரைத்தாய்!

    மிகவும் அருமையான கவிதை… வாழ்த்துக்கள் கணேஷ்.

  5. அட்ரா சக்கை!


Comments RSS TrackBack Identifier URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s